--- --:--:-- --

செப்டம்பர் 1, 2 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி..!

10

செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி படையில் சேர்க்கிறார்.

 

தற்சார்பு இந்தியா என்ற ஒளிரும் வழிகாட்டியாக இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறை நிறுவனங்களால் விரிவாக்கப்பட்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களையும் இயந்திரங்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்திய கடல்சார் வரலாற்றில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நவீன தானியங்கி அம்சங்களுடன் கப்பலாக இது விளங்குகிறது. கடற்படை கொடியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்த உள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூரில் 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில் மயமாக்கல் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.

 

Right Menu Icon