19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பள்ளி மூடல்..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரே பள்ளியில் பயிலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு சளி, காய்ச்சல் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
19 மாணவர்களுக்கும் பெற்றோர்களில் 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் மாணவர்கள் வசிக்கும் இடங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.





