உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி இடங்களுக்கு இன்று தேர்தல்..!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி இடங்களுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு இன்று தஞ்சை தற்செயல் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்காக கடந்த ஜூன் 20-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது. ஜூன் 27ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிமுதல் தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் 12ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி மொத்தமாக நூற்றி பத்து இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், தஞ்சையில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மயிலாடுதுறையை தேனியில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.





