--- --:--:-- --

உள்நாட்டு விமானங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்..!

5

சென்னை விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானங்கள் இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்குவதற்காக ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலருக்கு விமான நிலைய இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார்.

 

அதனை ஏற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தமிழகத்திற்குள்ளும், மற்ற மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு வெளிமாநிலங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு 100 விமானங்கள் வந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon