--- --:--:-- --

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி வைரமுத்துக்கு அனுப்பப்பட்ட மீம்ஸ்..!

6

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன் என்று தனது பாடல் வரியை மாற்றி எனக்கு அனுப்புகிறார்கள் என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து பெட்ரோல் விலை ராஜஸ்தான் மாநிலத்தில் சதமடித்து அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

 

இந்த நிலையில்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை மாற்றி அதை ரசிகர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்று வைரலாகி வருகிறது.

 

இயற்கை எனும் திரைப்படத்தில் எழுதிய காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என்ற பாடலை அப்படியே உல்டா செய்து காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன் என அனுப்பியிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

Leave a Reply

Right Menu Icon