--- --:--:-- --

வழித்தடத்தை காணவில்லை எனப் புகாரளித்துள்ள குடியிருப்புவாசிகள்..!

8

சென்னை மடிப்பாக்கத்தில் வழித்தடத்தை காணவில்லை எனக் கூறிய குடியிருப்புவாசிகள் காவல் நிலையத்தில் வித்தியாசமான ஒரு புகாரை அளித்திருக்கிறார்கள். மடிப்பாக்கம் பஜார் சாலையை ஒட்டியுள்ள பஸார் சாலையிலிருந்து ஜேகே சாலைக்கு வழித்தடம் அமைக்கப்பட்டது.

 

இந்த வழித்தடத்தில் தனியார் சர்க்கரை நோய் தடுப்பு சுவர்கள் அமைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குடியிருப்புவாசிகள் புகார் அளித்ததன் பேரில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் குடியிருப்புவாசிகள் வழித்தடத்தை காணவில்லை என கூறி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon