தமிழிசை சவுந்தரராஜனின் தாய் உடல்நலக்குறைவால் காலமானார்..!
சுதந்திர போராட்ட வீரரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தனின் மனைவியும், தெலுங்கானா தமிழிசை சௌந்தரராஜன் தாயுமான கிருஷ்ணகுமாரி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.
தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கான ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு தனது பெற்றோரை தன்னுடன் அழைத்துச் சென்றார். இரண்டு ஆண்டுகளாக தமிழிசை சவுந்தரராஜன் உடன் இருந்து வந்த அவரது தாய் கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டு சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.






