எண்ணூர் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: இளைஞர் உயிரிழப்பு, நண்பர் கவலைக்கிடம்
சென்னை எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலத்தில் பைக்கில் அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விபத்தில் மேக சுந்தர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த ஸ்ரீஹரன் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேர்காணலுக்காக ஷூ வாங்கச் சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுவதுடன், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





