--- --:--:-- --

முகத்தை பளபளப்பாக்க செய்த சிகிச்சையால் ரைசாவுக்கு நேர்ந்த விபரீதம்..!

2

தோல் மருத்துவர் ஒருவர் செய்த தவறான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாக நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகார் கூறியுள்ளார். மாடலாக இருந்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமான ரைசா தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்தார்.

 

அதனைத்தொடர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர் போன்ற திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது வீங்கிய முகத்துக்கான காரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் நான் முக சிகிச்சைக்காக பிரபல தோல் மருத்துவர் பைரவி என்பவரை சந்தித்தேன். ஆனால் அவர் எனக்கு தேவையில்லாத சிகிச்சையை வலுக்கட்டாயமாக அளித்தார். எவ்வளவு வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தற்போது எனது முகம் இப்படி மாறி இருக்கிறது.

 

இது தொடர்பாக அவரை நான் சந்திக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை பார்க்க மறுத்துவிட்டார். மேலும் அவரது உதவியாளர்கள் அவர் சென்னையில் இல்லை என்று கூறியதாக அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.அத்துடன் அவர் தனது வீங்கிய புகைப்படத்தையும் ரைசா பதிவிட்டுள்ளார்.

 

அதில் ரைசாவின் இடது பக்க கன்னம் வீங்கி உள்ளது. குறிப்பாக கண்ணருகே கொப்பளம் போல வீக்கம் ஏற்பட்டுள்ளது. முக வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். தனது தோலை மேலும் பளபளப்பாக்க மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்று கடைசியில் ரைசாவின் முகம் இப்படி மாறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon