--- --:--:-- --

கொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகளை வழங்கிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்..!

3

கொரொனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யோசனைகளை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

 

அது குறிப்பிட்ட காலத்தில் தடுப்பூசி போட அரசு நிர்ணயம் செய்தால் அதில் முன்னதாக தேவையான அளவு தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அப்போதுதான் குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்துகளை வழங்க உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.

 

தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் வினியோகிப்பது தொடர்பாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ள மன்மோகன்சிங் 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 

முன் களப்பணியாளர்கள் யார் என்பதை அறியவும் 45 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தடுப்பு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிக்க தேவையான நிதி சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon