வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து தாக்கிய காவல்துறை..!
பெரம்பலூரில் காவல்துறையினர் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற இளைஞரை காவல்துறையினர் பிடித்து பிடித்து தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரம்பலூர் அருகே புதிய பேருந்து நிலையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர்.
பெரம்பலூர் பாலக்கரை அருகே இவர்களது வாகனத்தை காவல் துறையினர் நிறுத்தும்போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் மடக்கிப்பிடித்தனர்.
அப்போது இருவர் தப்பி ஓடியதால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அஸ்வினி என்பவரை பிடித்து லத்தியால் தாக்கினார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.






