--- --:--:-- --

அண்ணனுக்கு சொத்தை எழுதி வைத்ததால் தந்தையை இரண்டு மகன்களே கொலை செய்த சம்பவம்..!

6

நெல்லை பணகுடியில் அண்ணனுக்கு சொத்தை எழுதி வைத்ததால் தந்தையை இரண்டு மகன்களும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பஞ்சர் கடை நடத்திவரும் காமராஜ் தனது இரண்டு காலி மனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மூத்த மகனுக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் எனக்கூறி காமராஜரும் அவரது இளைய மகன் ராஜா மற்றும் சேகர் ஆகியோர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

வாக்குவாதம் முற்றியதில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தையை வெட்டியதாக சொல்லப்படும் நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

 

இதையடுத்து கென்னடி வீட்டிற்கு சென்று அவரையும் சகோதரர்கள் தாக்கியதாக கூறப்படும் நிலையில் காயங்களுடன் தப்பி ஓடிய கென்னடி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon