உலகின் மிகப்பெரிய சுரங்கத்தில் இருந்து குதித்து சாதனை படைத்த வீரர்கள்..!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளிப் டைவிங் சாம்பியன் ரியானந்த் இஃப்ளான் மற்றும் ருமேனியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரம் கான்ஸ்டண்டின் போபோவீஸ் இவ்விருவரும் உலகிலேயே மிகப் பழமையான உப்புச் சுரங்கத்தில் 120 மீட்டர் ஆழத்தில் அண்டர் கிரவுண்ட் டைவிங் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
ருமேனியாவில் உள்ள உலகின் மிக பழமையான உப்புச் சுரங்கம் சலினா டொடாவில் இந்த ஜோடி சுவரிலிருந்து முக்கோண வடிவில் உள்ள சுரங்க பகுதிக்குள் குதித்து வெகு ஆழம் வரை பாய்ந்து சென்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் இவர்கள் பாய்ந்து சென்ற காட்சி ஒன்டர் லேண்ட் இதுபோன்ற அறிவியல் புனை கதைகளில் பார்ப்பது போன்று அதிசயமாக இருந்தது.






