சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரொனா பாசிடிவ்..!
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரொனா தொற்று உறுதியாகி இருப்பதாக அந்த கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் கொரொனாவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மனைவி சாதனையாதவுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முலாயம் சிங் குறுகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகனும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருக்கிறார்.






