--- --:--:-- --

நெல் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் இனி இருக்காது – அமைச்சர் வெங்கடரமணன் உறுதி

8

மிழகத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் இனி மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்கும் நடைமுறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

 

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகள் இனி யாருக்கும் லஞ்சம் தரத் தேவையில்லை என்றும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

 

மேலும், முந்தைய அரசின் ‘வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்’ தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இதற்கான தேவையான நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் த.வெ,க அரசால் மேம்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் வெங்கட்ரமணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மக்கள் முன்னேற்றத்திற்காக வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் தடையின்றி முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon