ஆ.ராசா தி.மு.க கொள்கைக்கு எதிராக எழுதியிருக்கிறார்; ஸ்டாலினே கண்டித்திருக்கிறார் – அமைச்சர் வன்னி அரசு
த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றது குறித்து தி.மு.க எம்.பி ஆ.ராசா வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்து புதிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது முதிர்ச்சியான விளக்கத்தை அளித்துள்ளார்.
ஆ.ராசா தங்களைக் தனிப்பட்ட முறையிலோ அல்லது சாதிய ரீதியிலோ கொச்சைப்படுத்தவில்லை என்றும், அவர் தான் காலம் காலமாக ஏற்றுக்கொண்டு பின்தொடரும் பெரியாரியக் கொள்கைகளுக்கு எதிராகவே அத்தகைய பதிவை எழுதியுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு ஆ.ராசாவின் கருத்தைக் கண்டித்து தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பதால், இதற்கு மேல் தாங்கள் இது குறித்து எதுவும் பேச வேண்டிய அவசியமோ, தேவையோ எழவில்லை என்றும் அமைச்சர் வன்னி அரசு இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.





