நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தடை இல்லை..!
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பிரதமரின் இல்லம் உள்ளிட்டவை அடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டணமான திட்டத்தை நிறுத்தி வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடக்கும் இந்த கட்டுமான பணிகளின் காரணமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் அந்த இடத்திலேயே தங்கி வேலை செய்வதால் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டியதில்லை என நீதிபதிகள் டிஎன் பட்டேல் மற்றும் ஜோதி தீர்ப்பளித்தனர்.
இப்படி ஒரு தேவையற்ற வழக்கை தொடுத்த மனுதாரருக்கு நீதிபதிகள் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த கட்டுமான பணிகள் வரும் நவம்பர் முடிக்கப்பட வேண்டும் என்பதால் அதைத் தொடர அனுமதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.






