--- --:--:-- --

பாலியல் புகாரில் கராத்தே பயிற்சியாளர் கைது..!

6

பாலியல் புகாரில் கராத்தே பயிற்சியாளர் கெவிராஜை அண்ணா நகர் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

 

கடந்த 2014ஆம் ஆண்டு பயிற்சியாளர் கெவிராஜ் ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பிய போது காரில் வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஒத்துழைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவரிடம் பயிற்சி பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

 

அதன்பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் பலாத்கார முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான கெவிராஜை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

 

விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடைய கெவிராஜ் நண்பர்களான சதீஷ், சதீஷ் குமார், பிரேம்குமார் ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்.

Leave a Reply

Right Menu Icon