இரு கட்சிகளை சேர்க்க முயற்சித்தேனா? ரஜினிகாந்த் விளக்கம்
ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றது கஷ்டமாக இருந்தது. அதனால் அவரை போய் பார்த்தேன். அதை வைத்து நான் விஜய் ஆட்சி அமைக்க கூடாது என்று செயல்படுவதாகவும், இரு கட்சிகளை சேர்க்க முயற்சி செய்வதாகவும் தகவல் வெளியானது. அவ்வளவு தரம்கெட்ட ஆள் நானில்லை.
உண்மையில் விஜயின் வெற்றி எனக்கு ஷாக் கொடுத்தது. எனக்கும் விஜய்க்கும் 25 ஆண்டுகள் வித்தியாசம். சின்ன வயதில் இருந்து அவரை பார்க்கிறேன். அவர் சின்ன வயதில் சி.எம். ஆகி இருக்கிறார். இதில் எனக்கு என்ன பிரச்னை? பொறாமை இல்லை. ஆச்சரியம் கலந்த சந்தோஷம். விஜய் மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் நல்லது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.





