விஜய்யின் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை – ராமநாதன் அர்ச்சுனா
ஈழத்தமிழர் பிரச்னைக்கு ஆதரவாக தமிழக முதல்வர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது, “எங்கள் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது திமுக மற்றும் அதிமுக அரசுகள் வேடிக்கை பார்த்தன. தேர்தல் காலங்களில் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னையை சிலர் பயன்படுத்திக் கொண்டனர்.
குறிப்பாக, சீமான் ஈழத் தமிழர் பிரச்னையை வாக்கு வாங்கும் அரசியல் கருவியாக மட்டுமே பேசியுள்ளார். தற்போது தமிழக முதல்வர் விஜய் தமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் தேவையான தலைவர் என நாங்கள் நம்புகிறோம். ஈழத்தமிழர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக அவர் வெளிப்படையாக பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.





