அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!
மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அதிபர் ஷேக் முகமது பின் சயத் விமான நிலையத்தில் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.இதையடுத்து அதிபர் ஷேக் முகமது பின் சயத்துடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பெட்ரோலிய இருப்பு, எல்பிஜி விநியோகம் ஆகிய விவகாரங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பரப்புக்குள் நுழைந்த பிரதமர் மோடியின் விமானத்திற்கு எஃப் 16 ரக போர் விமானங்கள் சூழ்ந்து பாதுகாப்பு வழங்கின.





