--- --:--:-- --

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்..!

3

மிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். ரவுடிகள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிஜேபி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

இதனை பதிவு செய்த நீதிபதிகள் புதிய சட்ட வரைவு மசோதா எப்போது சட்டப் பேரவையில் முன்வைக்கப் படும் என தமிழக உள்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon