மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவக் காற்றின் தாக்கம் காரணமாகவும், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு திசையில் 40 லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் தென்மேற்கு மத்திய வங்கக் கடல் அரபிக் கடலுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டம் ஐந்து சென்டி மீட்டர் மழையும் பொழிந்து உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





