--- --:--:-- --

தவெகவை ஆதரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் விருப்பம் – கிரிஷ் சோடங்கர்

1

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 இடங்களில் வென்றுள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெக தனி பெரும் கட்சியாக வென்றிருப்பதன் மூலம், அக்கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வார காலம் அவகாசமும் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை எனும் சூழலில், 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள தவெக ஆட்சி அமைக்க யார் ஆதரவு தருவார்கள் எனும் கேள்வி எழுந்துள்ளது.

 

குறிப்பாக நேற்று முன்னிலை விவரங்கள் வெளியானபோதே காங்கிரஸ் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் தவெகவை நோக்கித் திரும்பியுள்ளனர். அதனால்தான் தவெக இத்தகைய பிரம்மாண்டமான வாக்கு எண்ணிக்கையைப் பெற்று வருகிறது. இது குறித்த அறிக்கையை, எங்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமைப்புப் பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோருக்கு அனுப்பியுள்ளேன். தமிழகத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் அனைவரும் இணைந்து முடிவெடுப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று மீண்டும் ஏ.என்.ஐ.க்கு பேட்டி அளித்த கிரிஷ் சோடங்கர், “மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்துள்ளனர். இளைஞர்களும் பெண்களும் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மக்களின் இந்தத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.

தவெக என்னை அணுகவில்லை. கட்சியின் வேறு யாரையாவது அவர்கள் அணுகியுள்ளார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், தவெகவை ஆதரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். முதலில் அவர்கள் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்த பின் தவெக எங்களைத் தொடர்பு கொள்ளக் கூடும். தவெக-வை யாரும் சாதாரணமாகக் கருதக்கூடாது என்று நான் முன்னதாகவே அனைவருக்கும் எச்சரித்திருந்தேன்” இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon