--- --:--:-- --

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை – பிரேமலதா விஜயகாந்த்

2

விஜய் தரப்பிலிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை எனவும் நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம் தொடர்வோம் எனவும் விருதாச்சலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். விஜயின் தவெக முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், 234 தொகுதிகளில், 118 இடங்களில் வெற்றி பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால், தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே தவெக ஆட்சி அமைக்க யார் ஆதரவு தருவார்கள் எனும் கேள்வி எழுந்துள்ளது.

 

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரேமலதா விஜயகாந்த் வெற்றி சான்றிதழ் விருத்தாச்சலம் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு பிரியா பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எங்கள் வீட்டு பிள்ளை என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

 

ஆதரவுக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. மேலும் தங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்வதாகவும் ஆதரவு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்கிறோம் என்று தெரிவித்தார்.மேலும் தேர்தல் வாக்குறுதிகளில் தான் அளித்த வாக்குறுதிகள் விருதாச்சலம் தொகுதி மக்களுக்கு நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon