--- --:--:-- --

கான்பூர்–மதுரை சிறப்பு ரயில் அறிவிப்பு – டிக்கெட் முன்பதிவு ஜூன் 27ல் தொடக்கம்

3

ஹோலி பண்டிகையையொட்டி கான்பூர்–மதுரை இடையே இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஜூன் 27 காலை 8 மணி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

அதன்படி, ஜூலை 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கான்பூரிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர் மற்றும் திண்டுக்கல் வழியாக பயணித்து மூன்றாவது நாள் காலை 7.15 மணிக்கு மதுரையை வந்தடையும். மறுமார்க்கமாக, மதுரையிலிருந்து ஜூலை 4, 11, 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கான்பூருக்கு இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 27 காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon