--- --:--:-- --

மலேசியா பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா..! பின்னணியில் இந்தியாவின் உளவு அமைப்பான “ரா”.?

17

மலேசியா நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மலேசியா மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து மலேசியாவில் அடுத்தது என்ன? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாதீர் ராஜினாமாவுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான “ரா” வின் கைங்கர்யமே காரணம் எனவும் கூறப்படுகிறது.

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகையை உலகத்தில் உள்ள ஊடகங்கள் முதன்மை செய்தியாக வெளியிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சத்தமில்லாமல் இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றியது போல் மலேசியா அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது இந்தியாவின் உளவு அமைப்பான ரா என்று தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

 

உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்ற மகாதீர் முகமது, இந்தியாவுடன் வழக்கமான நட்புணர்வுடன் மலேசியா இருந்ததை மாற்றி, சில எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியா எச்சரிக்கை விடுத்தது.

 

மேலும் இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தலைமறைவான சாஹிர் நாயிக் என்பவருக்கு எந்த இஸ்லாமிய நாடுகளும் அடைக்கலம் கொடுக்கவில்லை. இந்தியாவை தேவையில்லாமல் பகைக்க வேண்டாம் என முடிவு எடுத்து அவ்வாறு ஈடுபட்டன. இந்த நிலையில் மலேசியா, சாகிர் நாயிக்கிற்கு அடைக்கலம் கொடுத்தது. அந்த முடிவை எடுத்தவர் மகாதீர் முகமது.

 

இதனையடுத்து மலேசியாவின் முடிவிற்கு பாடம் கற்பிக்க இந்தியா முடிவு செய்தது. மலேசியாவின் முக்கிய ஏற்றுமதியான பாமாயில் இறக்குமதியை கணிசமான அளவு குறைத்தது.

 

அதனை அடுத்து உள்நாட்டு அரசியலில் மகாதீர்க்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவுடன் விரோத போக்கை கடைபிடிக்க வேண்டாம் எனவும், அது நமக்கு எதிராக முடியும் என எதிர்க்கட்சிகளும் கூட்டணியில் உள்ள கட்சிகளும் அறிவுறித்தின.

 

கடந்த தேர்தலில் மகாதீர் முகமது தனியாக வெற்றிபெறவில்லை. மகாதீர், மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் அந்நாட்டு இன்னொரு அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் கட்சியான பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.

 

இந்நிலையில் தற்போது கூட்டணிக்கான ஆதரவை ஜஸ்டிஸ் கட்சி வாபஸ் வாங்க முடிவெடுத்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர், இதன் பின்னணியில் இலங்கையில் ராஜபக்க்ஷே சீனாவிற்கு ஆதரவான முடிவை எடுத்த போது எவ்வாறு அவரது அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு வகித்த சிறிசேனவை அதிபர் வேட்பாளராக கொண்டுவந்து இந்தியா வீழ்த்தியதோ, அதே பாணியில் தற்போது மகாதீரை வீழ்த்தியது இந்திய உளவு அமைப்பான ‘ரா’ வேலை என்கின்றனர்.

 

மேலும் அடுத்து அமையும் ஆட்சி சாகிர் நாயிக்கை மலேசியாவில் இருக்க அனுமதிக்காது. நாடு கடத்தப்படுவார் என்பதால் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்குள் அவரை கைது செய்து இந்தியா இழுத்துவர ரா வேலையை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தியாவை பகைத்தால் என்ன நடக்கும் என்பதனை மலேசியாவிற்கு உணர்த்திவிட்டதாக அங்குள்ள இந்திய வம்சாவளியினர் பெருமிதம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon