--- --:--:-- --

இந்த 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல வேண்டாம் : இந்தியர்களுக்கு மத்திய அரசின் அறிவுரை

6

ப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நாடுகளில் பரவி வரும் தொற்றுநோய்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் நிலையற்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே அங்கு உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவசர காலங்களில் அருகிலுள்ள இந்திய தூதரகங்களை உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon