--- --:--:-- --

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்க மகேந்திர குழுமம் திட்டம்..!

6

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியின் கனவை நிறைவேற்றும் வகையில் அவருக்கு நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்க மகேந்திர குழுமம் தெரிவித்துள்ளது. ஆலந்துறை அடுத்த பகுதியில் வசித்து வரும் 85 வயதான கமலாத்தாள் என்ற பெண் தள்ளாத வயதிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று பிரபலமானார்.

 

தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் கமலாத்தாள் யாருடைய உதவியும் இல்லாமல் இட்லி கடை நடத்தி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இட்லிக் கடையை தொடங்கியவர் ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவிற்கு விற்று வந்தார்.

 

பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்று வருகிறார். பாட்டி கடையின் சுவையால் பொதுமக்கள் பலர் தினந்தோறும் பாட்டி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆக மாறி விட்டனர்.

 

மிக எளிமையான முறையில் கடைகளை நடத்தி வரும் பாட்டி ஊரடங்கு காலத்திலும் தனது சேவையை நிறுத்தாமல் மிகக் குறைந்த விலையில் பலரது பசியை போக்கி வந்தார்.

 

பாட்டியின் சேவையைப் பாராட்டி மகிந்த குடும்பத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை வழங்கியுள்ளார். மேலும் நிலம் வாங்கி கொடுத்து வீடு கட்டி கொடுக்க ஆனந்த் மகேந்திரா முன்வந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon