--- --:--:-- --

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!

13

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குமரி கடல் பகுதிக்கு நகர்ந்து உள்ளதாக தெரிவித்தார்.

 

அங்கு வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் எனவும் அவர் கூறினார். இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்வதாக தெரிவித்தார்.

 

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். சென்னையை பொருத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon