மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கட்டையன் யானை..!
ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் உலா வந்த கட்டையன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மலைப்பகுதியில் உள்ள கிராம விவசாய நிலங்களுக்குள் புகுந்த கட்டையன் யானை பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
அதனை பிடிக்க அரசிடம் அனுமதி பெற்ற வனத்துறை அதிகாரிகள் தோட்டத்தில் உலா வந்து அதற்கு மயக்க ஊசி செலுத்தினர்.
இதனையடுத்து அந்த யானை ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு யானை வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் நிம்மதியடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.





