--- --:--:-- --

மாணவ, மாணவிகள் செலுத்திய வைப்புத் தொகையில் முறைகேடு..!

1

காஞ்சிபுரம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் சுமார் மூன்று கோடி ரூபாய் முறைகேடு செய்த கல்லூரி உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

 

கல்லூரி விடுதியில் தங்கும் மாணவ மாணவிகள் செலுத்திய வைப்பு தொகை முறையாக வங்கி கணக்குகளில் வரவில்லை என தொடர்ந்து புகார் அளித்தனர். கல்லூரி முதல்வர் கவிதா வங்கி கிளைக்கு சென்று விசாரணை செய்ததோடு வங்கி கணக்கில் வரும் 41 ஆயிரம் மட்டுமே இருந்தது தெரியவந்தது.

 

பின்னர் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு கல்லூரியின் வங்கி கணக்கு நிர்வாகிகளுக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்த நாமக்கலை சேர்ந்த பிரபு என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

 

கல்லூரிக்கு சொந்தமான ஒன்பது வங்கி கணக்குகள் மூன்று கோடிக்கு அதிகமாக மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாகி ஆந்திராவில் பதுங்கி இருந்த பிரபுவை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon