ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மது அருந்திய இளைஞர்கள்..!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அங்கு சில இளைஞர்கள் மது அருந்துவதை தட்டி கேட்ட பொழுது வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு இரவு நேர காவலராக பணியாற்றிய ராமகிருஷ்ணன் என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.





