மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அலட்சியம்..!
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெரும்பாலான அதிகாரிகள் தங்களது கைபேசியை பார்த்துக் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தது. இச்செயல் மக்களிடையே சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுர மாவட்டம் திருவாரனை அருகே பாண்டு குடியில் அரசு சார்பில் நடத்தப்படும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பாண்டுகுடி தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்த முகாம்ல் பாண்டுகுடி, நகரிக்கத்தான், கோடனூர், தேளூர், சிறுகம்பையூர், பதனக்குடி, ஓரியூர், மாவூர், தளிர்மருங்கூர், நிலமழகியமங்கலம் என 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நடத்தப்பட்டது. இதில் பட்டா மாறுதல், மகளிர் உரிமைத்தொகை, குடும்ப அட்டை திருத்தம் உள்ளிட்ட அரசு சார்ந்த பல்வேறு வகையான நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மக்கள் திட்ட முகாமிற்கு திருவாடானை தாசில்தார் அமர்நாத், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கியமேரி சராளா மற்றும் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்கள் குழுமியிருந்த மக்களுக்கு இடையே ஆங்காங்கே அலைந்து அவர்களுக்கு உதவிகளை செய்து வந்தனர்.
அதே நேரத்தில் அங்கு அனைத்து துறை அலுவலகம் சார்பில் அதிகாரிகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அதில் பலர் தங்கள் கைகளில் உள்ள செல்போனில் ஏதோ பார்த்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு பக்கம் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், என அனைவரும் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வரும் நிலையில் இந்த அலுவலர்களோ எவ்வித கவலையும் இன்றி தங்களது செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தனர்.
இது பொதுமக்களிடையே வரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட அளவிலான அதிகாரிகளும் வரவில்லை. இது போன்ற அதிகாரிகளால் அரசியல் திட்டங்கள் மக்களுக்கு சரிவர சென்றடைவதில்லை என்றும் குற்றச்சாட்டும் எடுத்துரைக்கப்பட்டது.





