--- --:--:-- --

திருமுருகன்பூண்டி, நெசவாளர் காலனியில்  வெறி நாய் பிடித்த தெரு நாய்களால் மக்கள் அவதி 

a1efb3ac-779b-47c3-badb-2c8b548ded1a

 திருப்பூர், திருமுருகன்பூண்டி 7வது வார்டு, நெசவாளர் காலனியில் 30 க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி வருகின்றன.

 

இரவு முழுவதும் இந்த நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டும், ஊளையிட்டும் மக்களை தூங்கவிடாமல் தொந்தரவு செய்துவ வருகின்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அங்கு இருந்த ஒரு கருப்பு நிற பொட்டை நாய் 6 குட்டிகளை ஈன்றது. அப்பொழுது மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ஒரு குட்டி சாக்கடை கால்வாயில் விழுந்து அடித்துச் சென்றுவிட்டது. மீதி இருந்த ஐந்து நாய்களில் நான்கு குட்டி நாய்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வளர்க்க எடுத்து சென்று விட்டனர்.

 

இதனால் ஒரு குட்டியுடன் வசித்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த குட்டியையும் ஒருவர் எடுத்துச் செல்ல தாய் நாயானது வெறியுடன் குரைத்து கொண்டே நடந்து செல்லும் மக்களையும் குழந்தைகளையும் துரத்தி பயமுறுத்தி வந்தது. இந்தநிலையில் அந்த குட்டி நாயை எடுத்து சென்றவர் மீண்டும் கொண்டு வந்து வைத்து சென்றுவிட்டார். அதனால் இரண்டு நாட்களாக தாய் நாய் பேசாமல் இருந்தது இந்த நிலையில் இன்று காலை மற்றொருவர் அந்த குட்டி நாயை எடுத்துச்செல்ல அந்த தாய் நாய்க்கு மதம் பிடித்தது போல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது.

 

இந்தநிலையில் அங்கு அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்திவரும் ராமு வளர்த்துவந்த கோழியை கடித்தது,. தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஒரு பூனையையும் கடித்தது.  இதனால் அப்பகுதி மக்கள் அந்த நாயை கண்டு பயந்து ஒதுங்கி செல்கின்றனர். தங்கள் குழந்தைகளையும் வெளியே ரோட்டில் நடமாடவிட பயந்து உள்ளனர். இதனால் அந்த தாய்நாய் மற்றும் தெருநாய்களினால் உயிர் சேதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுப்பார்களா?

Leave a Reply

Right Menu Icon