திமுக அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்ட அமைச்சர் சாமிநாதன்!
பரப்புரையின்போது அமைச்சர் சாமிநாதனுக்கு உற்சாக வரவேற்பு தரப்ப்ட்டது.
காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் அமைச்சர் சாமிநாதன் இன்று வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர்.
காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட குறிப்பாக தொட்டியபட்டி, கே.ஜி.கே நகர், அகிலாண்டபுரம் மற்றும் கோட்டை மாநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் அவர் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அதனைத் தொடர்ந்து அழகேகவுண்டன்புதூர், அமராவதி நகர், பங்களாபுதூர், கலிமேடு மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.

அதேபோல், சவுண்டம்மன் கோவில் வீதி, வனிதா கல்வி நிலையம் மற்றும் காமராஜ் நகர் பகுதிகளில் அமைச்சருக்குக் கிடைத்த வரவேற்பு தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சௌடாம்பிகை நகர் மற்றும் அய்யாவு செட்டியார் வீதி உள்ளிட்ட இடங்களில் கூடியிருந்த மக்களிடையே பேசிய அவர், காங்கேயம் நகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே தனது முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்டார்.
சாலை வசதி, குடிநீர் மேலாண்மை மற்றும் கல்வி நிலையங்களின் தரம் உயர்த்துதல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதியளித்தார். அமைச்சருடன் சென்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர். நகரின் ஒவ்வொரு வீதியிலும் அமைச்சர் மேற்கொண்ட இந்த நடைப்பயணம் தொகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கையையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிந்தது.






