எடப்பாடி பழனிசாமி உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: டிடிவி தினகரன்
அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுபயனம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமராக்கியில் கட்சி கொடியை ஏற்றிவைத்ததுடன், ஊராட்சிமன்ற தலைவரும், அமமுக அம்மா பேரவை மாவட்ட இனை செயலாளருமான முருகானந்தம் என்பவரின் வீட்டு காதனி விழாவில் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தினார்.
அவரிடம், பாஜவுடனான கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்து பேசிய அவர், பாஜவுடனான கூட்டணி குறித்து இந்த ஆண்டு இறுதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் என ஏற்கனவே தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டை பாதிக்க கூடிய திட்டங்களை, குறிப்பாக ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகள், பொது மக்கள் எதிர்த்த திட்டங்களை கொண்டு வந்ததால் மத்திய ஆளும் அரசிற்கு எதிராக அந்த கருத்தை தெரிவித்தேன்.
இனி வாழ்நாள் முழுவதும் இல்லை என தெரிவிக்கவில்லை. அன்மையில் கூட நிலக்கரி ஆய்வறிக்கை வெளியிட்ட பிறகு எதிர்ப்பு தெரிவித்தோம். உடனடியாக மத்திய அரசு அதனை திரும்ப பெற்றது. மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டுவந்தால் எதிர்ப்பதும், நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது ஆதரிப்பதும் இயல்பு என கூறினார்.
இதனை தொடர்ந்து ஒ.பி.எஸ் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், மாநாட்டிற்கு பிறகு என்ன விளைவு ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தினகரன் பேசினார்.





