--- --:--:-- --

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு..!

10

மிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற-இறக்கங்கள் நீடித்து வருகின்றன. வாரத் தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. அதன்படி, நேற்று ஒரு கிராம் தங்கம் 14,750 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,18,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,18,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, இன்று ஒரு கிராம் தங்கம் 14,870 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

 

கடந்த ஐந்து நாட்களின் தங்கம் விலை நிலவரத்தை உற்றுநோக்கினால், கடந்த மே 14ஆம் தேதி ஒரு சவரன் 1,20,400 ரூபாயாக இருந்த தங்கம் விலை, மே 15 அன்று 1,18,120 ரூபாயாகக் குறைந்தது. அதனைத் தொடர்ந்து மே 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் விலை மாற்றமின்றி ஒரே அளவாக ஒரு சவரன் 1,18,000 ரூபாய் என்ற விலையிலேயே நீடித்தது.

 

 

மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களின் வெள்ளி விலை நிலவரத்தின்படி, மே 14ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி 315 ரூபாயாக இருந்தது. பின்னர் மே 15 அன்று 305 ரூபாயாகவும், மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 290 ரூபாயாகவும் குறைந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று மே 18ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாயாக உயர்ந்த நிலையில், இன்றைய தினமும் அதே விலையிலேயே நீடிக்கிறது.

Leave a Reply

Right Menu Icon