--- --:--:-- --

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 4 பேர் கொரோனா வைரஸால் பலி

1

ஜப்பானின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தி டைமன் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் இறங்கிய பயணி ஒருவருக்கு ஒருவர் கொரோனா இருப்பது உறுதியானதை தொடர்ந்து யோகோகோமா துறைமுகத்தில் கடந்த மூன்றாம் தேதி தனி இடத்தில் நிறுத்தப்பட்டது டைமன் ப்ரின்சஸ் சொகுசு கப்பல்.

 

கப்பலில் இருந்த 3 ஆயிரத்து 711 பேருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். இதில் 132 சிப்பந்திகளும், 6 பயணிகளும் அடங்குவர். இந்த 138 இந்தியர்களில் 5 பேர் தமிழர்கள். கப்பலில் பயணித்த 454 பேருக்கு கொரோனாபாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

5 இந்தியர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த இந்தியர்களின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் கப்பலில் இருந்த அமெரிக்கர்கள் அவர்களது நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கப்பலில் இருக்கும் ஹாங்காங், கனடா பயணிகளையும் தனி விமானம் மூலம் அழைத்து செல்ல அந்நாடுகள் முடிவு செய்துள்ளன. கப்பலில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon