சென்னை தீவுத்திடலில் இன்று மாலை முதல் பட்டாசு விற்பனை தொடக்கம்..!
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் இன்று மாலை முதல் பட்டாசு விற்பனை தொடங்க உள்ளது.
40 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டதாகவும் அண்டை மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு கொள்முதல் செய்யப்படும் பட்டாசுகளும் தமிழகத்திலேயே விற்பனை செய்யப்படுவதால் இந்த ஆண்டு பட்டாசு விலை கணிசமாக குறையும் என்றும் விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
காலை 10 மணி முதல் 10 மணி வரை பட்டாசு கடைகள் செயல்படுகின்றன.






