--- --:--:-- --

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

1

மிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon