--- --:--:-- --

திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து..6 பேர் உயிரிழப்பு..!

8

திண்டுக்கல் சிற்பி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். தரை மற்றும் முதல் தளத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்.

 

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்த்தில் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் மருத்துவமனையில் இருந்து குறைந்தது 29 நோயாளிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

நேற்று இரவு செய்தியின் படி, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon