--- --:--:-- --

பிறந்தநாளில் மகன் கண் முன்னே தந்தை நீரில் மூழ்கி பலி..!

4

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கோவில் குளத்தில் குளித்த லாரி ஓட்டுநர் 5 வயது மகன் கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேஷ்குமார் என்பவர் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவாலங்காட்டில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார்.

 

இந்த நிலையில் தனது ஐந்து வயது மகன் மற்றும் மாமியாருடன் குளத்திற்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி ராஜேஷ்குமார் உயிரிழந்தார்.

 

Right Menu Icon