உதவி ஆய்வாளரை சுட்ட பிரபல ரவுடி..!
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த போலீசார் ரகசிய தகவலின் பேரில் நாகூரில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவரை கைது செய்ய சென்ற காவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரவுடி மணியை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தாக்குதலில் பலத்த காயமடைந்த தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.





