காவல்துறையினருக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவு..!
கொரொனா சூழலில் களப்பணியாற்றும் காவல்துறையினர் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் செய்தி குறிப்பில் கொரொனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது காவல்துறையினர் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் துறையினரின் பணியை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






