--- --:--:-- --

நவம்பர் 26ல் பொது வேலைநிறுத்தம் நடத்த திமுக முழு ஆதரவு..!

2

த்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக இருந்த 44 சட்டங்களில் 15 ஐ மத்திய அரசு ரத்து செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நடைமுறையில் உள்ள 29 சட்டங்களையும் நான்கு தொகுப்புகளாக்கி உள்ளதால் தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு அம்சங்கள் பறிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பல நூற்றாண்டுகளாக போராடிப் பெற்ற தொழிலாளர்கள் உரிமையை உறுதி செய்யும் சட்டங்களை ரத்து செய்யும் முன் நாடாளுமன்றத்தில் ஆக்க பூர்வமாக விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

 

தொழிலாளர் விரோத சட்டத்தை தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தொழிலாளர் நலனில் அக்கறை உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று ஒருமுகமாக போராட வேண்டும் என மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon