கோயம்பேடு சந்தையில் வேலை பார்க்கும் தம்பதியின் 3 மாத பெண் குழந்தை கடத்தல்..!
சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்க்கும் தம்பதியின் 3 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது தொடர்பாக காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் – சத்யா தம்பதி கோயம்பேடு சந்தையில் வாழைக்காய் வண்டியிலேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் அருகே தூங்கிக்கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை இன்று அதிகாலையில் காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் குழந்தையை காணவில்லை என புகார் அளிக்க வந்த ரமேஷிடம் சரிவர விசாரிக்காமல் அலட்சியம் காட்டிய உதவி ஆய்வாளரிடம் அண்ணாநகர் துணை ஆணையர் விளக்கம் கேட்டுள்ளார்.






