--- --:--:-- --

மக்களுடனான உறவின் ஆழம்.. பிரசாரத்தில் தினேஷ்குமார் நெகிழ்ச்சி!

Dineshkumar

தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த தினேஷ்குமார்

திருப்பூர்: தெற்கு தொகுதியின் பல்வேறு பகுதிகளில், திமுக வேட்பாளர் தினேஷ்குமார் மின்னல் வேகத்தில் வாக்கு சேகரித்தார். திமுக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டும், 2.0 ஆட்சியில் திமுக செய்து தரவுள்ள திட்டங்களையும் சொல்லி, தினேஷ்குமார் பிரசாரம் செய்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார், திருப்பூர் சாய் பாபா திருக்கோவிலில் தரிசனம் செய்து பரப்புரையை தொடங்கினார். கோயில் நிர்வாகிகள் மற்றும் அங்கிருந்த பக்தர்கள், தினேஷ்குமாருகு உற்சாக வரவேற்பு தந்தனர்.

 

தினேஷ்குமார்
சாய்பாபா கோயிலில் வழிபாடு செய்த தெற்கு வேட்பாளர் தினேஷ்குமார்

 

தினேஷ்குமார் குமார் கூறுகையில், “மக்களின் அன்பும் மரியாதையும் சூழ, பிரசாதம் வழங்கி வாழ்த்தினர். இது ஒரு சாதாரண தரிசனம் அல்ல; மக்களுடன் உள்ள உறவின் ஆழத்தை காட்டும் தருணம். மதம் கடந்து மனிதநேயம் பேசும் இந்த சந்திப்பு, மக்கள் மனதில் உருவாகிய நம்பிக்கையின் வெளிப்பாடு” என்று தெரிவித்தார்.

அதேபோல், தனது தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக, திருப்பூர் குலால சமுதாய முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் உறுப்பினர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தினேஷ்குமார். இரு சங்க நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள், எதிர்பார்ப்புகளை கவனமாக தினேஷ்குமார் கேட்டறிந்தார்.

Leave a Reply

Right Menu Icon