--- --:--:-- --

இதுவரை ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் விவரங்கள்!

11

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 2009 பிப்ரவரி 22 இல் 6 வயது சிறுவன் மாகி ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். 30 மணிநேரம் போராடியும் சிறுவன் உயிரிழந்தான். 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்தான்.

 

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி நெல்லை மாவட்டம் கைலாசநாத புரத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான். 2012 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 அடி ஆழத்தில் விழுந்த 3 வயது சிறுவன் குணா உயிருடன் மீட்கப்பட்டார். 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி தேவி பத்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து 2015ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 2 வயது சிறுவன் தமிழரசன் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

 

கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சம்பவத்தில் 9 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாகை மாவட்டத்தில் இரண்டரை வயது சிறுமி சிவதர்ஷினி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். நீண்டநேரம் போராடி மீட்பு படையினர் சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

Leave a Reply

Right Menu Icon