முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினருடன் இன்று முக்கிய ஆலோசனை..!
தமிழகத்தில் நாளை மறுநாள் உடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் பிற்பகலில் மருத்துவ குழுவினர் ஆலோசிக்கிறார்.
இதில் மேற்கொள்ளப்படும் முடிவுகளைப் பொறுத்து முதலமைச்சர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இ பாஸ் முறையை ரத்து செய்யுமாறு மத்திய அரசு அறிவித்த நிலையில் தமிழகத்தில் இ பாஸ் முறை குறித்தும் பொது போக்குவரத்து குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.






